செப்டம்பரில் 35 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் – ஆய்வில் தகவல்
16 Jul,2020
நாட்டில் தற்போதைய நிலையைப்போன்று கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் அதிகரித்துச் சென்றால், செப்டம்பரில் 35 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) தெரிவித்துள்ளது.
அதேநேரம் அதில் 10 இலட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள் என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக மஹராஷ்டிராவில் 6.3 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் டெல்லியில் 2.4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் தமிழகத்தில் 1.6 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் இந்திய அறிவியல் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் குஜராத் மாநிலத்தில் 1.8 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் கர்நாடகாவில் மட்டும் 2.1 இலட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் 2021 மார்ச்சில் 37.4 இலட்சம் பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் 1.88 லட்சம் பேர் வரையில் உயிரிழந்திருப்பார்கள் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆய்வை நடத்திய பேராசிரியர்கள் சஷிகுமார் தீபக் குழுவினர் கூறுகையில், செப்டம்பர் கணக்கின்படி இந்தியாவில் 1.4 இலட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள். அதில், மஹாராஷ்டிராவில் 25 ஆயிரம், டில்லியில் 9,700 பேரும் கர்நாடகாவில் 8500 பேரும் தமிழகத்தில் 6300 பேரும் குஜராத்தில் 7300 பேரும் உயிரிழந்திருப்பார்கள் என தெரிவித்துள்ளனர்