தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகளின்றி முழு ஊரடங்கு... பெட்ரோல் பங்கும் இயங்காது
05 Jul,2020
தமிழகத்தில் இன்று முழு முடக்கம் என்பதால் பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் உள்ளிட்டவை இயங்காது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. நாளை முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மதுரையில் நாளை முதல் 7 நாட்களுக்கு மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக மாவட்டங்களுக்குள்ளும் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளின்றி பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பால், மருந்து, மருத்துவ சேவைகள் தவிர வேறு எதற்கும் அனுமதியில்லை. இதனால் தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.