கோவாவில் மீண்டும் தொடங்கிய சுற்றுலா சேவை - கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்
02 Jul,2020
மாநிலம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக பதிவு செய்யப்பட்ட 250 உணவக விடுதிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும்,. விடுதிகளில் தங்க பயணிகள் அனைவரும் முன் கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்றும் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் அஜ்கோன்கர் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பில்லாத பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்பதால், பயணிகள் தங்களுக்கு தொற்று கிடையாது என்ற மருத்துவரின் சான்றிதழை கட்டாயம் எடுத்து வர வேண்டும் என்றும் இல்லையென்றால், மாநில எல்லையில் சோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என உறுதியானால் மட்டும் மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.