தமிழகத்தில் லாக்டவுனை நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை - மருத்துவ நிபுணர்கள்
29 Jun,2020
தமிழகத்தில் லாக்டவுனை நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை என்று முதல்வர் உடனான ஆலேசானைக்கு பின் மருத்துவ நிபுணர்கள் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாளை உடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுப்பட்டார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் மருத்துவ நிபுணர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், “சென்னையை போன்று மற்ற நகரங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோம். லாக்டவுன் மட்டும் கொரோனாவிற்கு தீர்வாகது. நீண்ட நாட்கள் மக்களை லாக்டவுனில் வைத்திருக்க முடியாது. முதல்வரிடம் லாக்டவுனை நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை “என்றனர்.
மேலும் கொரோனாவை கண்டு மக்கள் அச்சப்பட வேண்டாம். 80 சதவீத நபர்களுக்கு லேசான அறிகுறியே உள்ளது. திருச்சி, மதுரை, திருவண்ணாலை மாவட்டங்களில் பரிசோதனை அதிகரிக்க முதல்வரிடம் பரிந்துரைத்துள்ளோம். தற்போது நாள் ஒன்றுக்கு 30,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க அமெரிக்காவில் இருந்து மருந்துகளை வர வைத்துள்ளோம்“ என்றுள்ளனர்.