ஜூலை 5 முதல் ஒவ்வொரு ஞாயிறும் முழு ஊரடங்கு: கிட்டதட்ட 20,000; அதீதமாகும் கொரோனா!
28 Jun,2020
சென்னையில் கடந்த 21ஆம் தேதி ஞாயிறும், இன்றும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஜூலை 5 முதல் மறு அறிவிப்பு வரும் வரை ஒவ்வொரு ஞாயிறு அன்ரும் முழு ஊரடங்கு என
ஜூலை 5 முதல் ஒவ்வொரு ஞாயிறும் முழு ஊரடங்கு
அறிவிக்கப்பட்டுள்ளது
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் அம்மாநில அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளால் ஓரளவு கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கர்நாடகாவில் 11,923 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் தொற்று பரவலை தடுக்கும் விதமாக வரும் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது
மேலும் முழு ஊரடங்கு நேரம் இரவு 9 மணி முதல் இருந்த நிலையில், ஜூலை 10ஆம் தேதி முதல் இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை செயல்பாட்டில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர வேறு எந்த கடையும் திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அரசு அலுவலகங்களும் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் இயங்காது என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ள
ஒரு நாள் பாதிப்பு கிட்டதட்ட 20,000; அதீதமாகும் கொரோனா!
இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 19,906 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் 19,906 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,08,953லிருந்து 5,28,859 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,881லிருந்து 3,09,713 ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,685லிருந்து 16,095 ஆகவும் உயர்வு.
அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 1,59,133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 84,245 ஆக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,273 ஆக உயர்வு.