மீண்டும் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குவிக்கும் சீனா!
25 Jun,2020
லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த மாதம் 15-ந் தேதி ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 பேரும், சீன தரப்பில் 35 பேரும் உயிர் இழந்தனர். இது தொடர்பாக இரு நாட்டு ராணு வ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, லடாக் எல்லை யில் இருந்து படைகளை வாபஸ் பெற இரு தரப்பிலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் பேசுவார்த்தை நடந்து ஒரு நாளுக்கு பிறகு கல்வான் ஆற்றில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டின் இருபுறமும் சீன கட்டமைப்புகள் இருப்பதைக் காட்டும செயற்கை கோள் படங்கள் வெளியாகி உள்ளது.
இந்த படங்கள் மோதல் நடந்த ரோந்து புள்ளி 14 க்கு அருகில் உள்ளது. மே 22 முந்தைய செயற்கைக்கோள் படங்கள் இந்த இடத்தில் ஒரு கூடாரம் இருப்பதைக் காட்டியது. இருப்பினும், புதிய படங்கள் தளத்தில் சாத்தியமான தற்காப்பு சீன முகாம்களை காட்டுகின்றன. புதிய படங்களில் தங்குமிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை முன்பு இல்லை.
ரோந்து புள்ளி 14 ஐச் சுற்றி ஒரு ஊடுருவலின் தெளிவான அறிகுறிகள் உள்ளன. இவை எமது பக்கத்திலுள்ள தற்காப்பு அமைப்புகளாகத் தோன்றுகின்றன, ”என்கிறார் இந்தியாவின் முன்னணி கார்ட்டோகிராஃபர்களில் ஒருவரான முன்னாள் மேஜர் ஜெனரல் ரமேஷ் பாத்தி. இவர் இந்தியாவின் கூடுதல் சர்வேயர் ஜெனரலாக ஓய்வு பெற்றவர் ஆவார். "படங்கள் கனரக வாகனங்களின் தெளிவான போக்குவரத்தை காட்டுகின்றன, அவை அந்தப் பகுதியில் நிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதைக் குறிக்கிறது."
இதுகுறித்து கருத்து தெரிவிக்க என்.டி.டி.வி ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தை அணுகியுள்ளது. "நாங்கள் அதை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்," என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.