தமிழகத்தில் இன்று (ஜூன் 22) ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 62,087 ஆகவும், பலி எண்ணிக்கை 794 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 2,710 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 58 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 62,087 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 87 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 26,592 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 9,19,204 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
இன்று அரசு மருத்துவமனையில் 30 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 37 பேர் உயிரிழந்ததை அடுத்து, தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 794 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 27,178 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுடில்லி: இந்தியாவில் நேற்று(ஜூன் 21) ஒரே நாளில் 14,821 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.2 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,699 ஆக உள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 14,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 387 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 37 ஆயிரத்து 196 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 445 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 669 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில வாரியாக பாதிப்பு விவரம்
மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி
மஹாராஷ்டிரா - 1,32,075 - 6,170
டில்லி - 59,746 - 2,175
தமிழகம் -59,377 - 757
குஜராத்-27,260-1,663
உ.பி.,-17,731-550
ராஜஸ்தான்-14,930-349
மேற்கு வங்கம்- 13,945-555
ம.பி.,-11,903-515
ஹரியானா-10,635-160
கர்நாடகா-9,150- 137
ஆந்திரா 8,999-106
தெலுங்கானா-7,802-210
பீஹார்-7,612-53
காஷ்மீர்-5,956-82
அசாம்-5,388-09
ஒடிசா-5,160-14
பஞ்சாப் 4,074-99
கேரளா-3,172-21
உத்தர்காண்ட்-2,344-27
சத்தீஸ்கர்-2,275-11
ஜார்க்கண்ட்-2,073-11
திரிபுரா-1,221-01
மணிப்பூர்-841-0
லடாக்-837-01
கோவா-754-0
ஹிமாச்சல பிரதேசம்-673-08
சண்டிகர்-406-06
புதுச்சேரி-366-08
நாகலாந்து-211-0
மிசோரம்-141-0
அருணாச்சல பிரதேசம் - 135- 0