16 இந்திய ராணுவத்தை கடத்திச் சென்ற சீனப் படை
20 Jun,2020
இந்திய ராணுவத்தின் முகாமுக்குள் நுளைந்து, ஆணிகள் பொருத்தப்பட்ட ஒரு வகை மூங்கில் தடிகளால், இந்திய ராணுவத்தை அடித்துக் கொன்ற சீனப் படை. அங்கிருந்து 16 இந்திய ராணுவப் சிப்பாய்களையும் கடத்தி சென்றுள்ள விடையம் தற்போது தான் கசிந்துள்ளது. இவர்களில் 10 பேரை சீன எல்லையில் இன்று அதிகாலை சீன ராணுவம் விடுவித்துள்ளது. (கை கலப்பு ஏற்பட்ட போது எடுக்கப்பட மோபைல் வீடியோ வெளியாகியுள்ளது)
இதனை அடுத்து அவர்கள் ஓடி, இந்திய எல்லைக்குள் வந்து சேர்ந்துள்ளார்கள் என்று லடாக் பகுதியில் இருந்து செய்திகள் கசிந்துள்ளதாக, ஆங்கில ஊடகம் செய்திகளை வெளியிட்டுள்ளது. இந்திய ராணுவம் தமக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை மறைத்து வருவதோடு. சீன ராணுவம் பிடித்துச் சென்ற இந்திய வீரர்கள் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் விடுக்கவில்லை. இவர்களை சீன ராணுவம் ஒருவேளை கொன்றிருந்தால் இவர்களின் நிலை என்னவாகி இருக்கும் என்ற கேள்விகள் எழுகிறது.
போரில் இறந்ததாக கூறி இல்லையெனில் காணமல் போய்விட்டதாக கூறி இந்திய ராணுவம் சமாளித்து இருக்கும். எனவே சரியான தகவல்களை இனியாவது இந்திய ராணுவ தரப்பு வெளியிடவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வருகிறது.