எல்லை பகுதியில் புல்டோசர்களை கொண்டு ஆற்றின் ஓட்டத்தை மாற்றும் சீனா-செயற்கைகோள் படங்கள்
19 Jun,2020
இந்திய-சீன வீரர்கள் இடையே லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15 அன்று மிகப்பெரிய மோதல் நடந்து உள்ளது. நமது தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். சீன தரப்பில் 43 பேர் வரை இறந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.
சீன வீரர்கள் ஜூன் 15 மாலை கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு வந்தனர், இந்திய வீரர்களும் - சீன வீரரகளும்மோதிக்கொண்டனர். சில இந்திய வீரர்கள் அப்பகுதியில் உள்ள குன்றிலிருந்து தூக்கி எறியப்பட்டு கொல்லப்பட்டனர்.சிலர் கடுமையான குளிர்ந்த காலநிலைக்கு ஆளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில வீரர்கள் கல்வான் ஆற்றில் விழுந்து உயிர் இழந்ததா தகவல்கள் தெரிவிக்கின்றன, இருப்பினும், நதி உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடக்கும்போது அது வெறுமனே வறண்டு ஓடிக்கொண்டு இருப்பதை செயற்கை கோள் படங்கள் காட்டுகின்றன.
தற்போது இந்திய மற்றும் சீன வீரர்களுக்கிடையில் பயங்கர மோதல் நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வடகிழக்கு லடாக்கில் கல்வான் ஆற்றின் ஓட்டத்தைத் தடுக்க அல்லது மாற்றி அமைக்க செய்வதற்கான சீன முயற்சிகளை என்டிடிவிக்கு கிடைத்துள்ளன
கல்வான் பள்ளத்தாக்கில் சீன பகுதியில் சீன புல்டோசர்கள் செயல்பாட்டில் உள்ளதை படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. புல்டோசர்கள் காணப்படும் இடத்திலேயே ஆற்றின் ஓட்டம் மாறுகிறது - நீல நீரைப் பாய்ச்சுவதிலிருந்து ஒரு சிறிய, சேற்று நீரோடை வரை, அது சிறிது தூரத்தில் எல்லைகட்டுப்பாட்டு கோட்டியில் இந்தியப் பக்கத்தைக் கடக்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.
எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் கிலோமீட்டருக்குள் கால்வான் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ லாரிகள் பெரும்பாலும் வறண்ட கல்வான் நதி படுக்கையில் நிறுத்தப்பட்டுள்ளதைக் காணலாம். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த படங்கள் இந்த அறிக்கையில் சேர்க்கப்படவில்லை.
இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க ஊடகம் சார்பில் சீன தூதரகத்தை அணுகியுள்ளது மற்றும் எதிர்வினை இருந்தால் இந்த அறிக்கையை புதுப்பிக்கப்படும். கல்வான் பள்ளத்தாக்கினுள் இந்த நதி தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பதாக இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் இந்திய மற்றும் சீன கட்டமைப்பின் ஆழத்தையும் படங்கள் குறிக்கின்றன.
சர்ச்சைக்குரிய பிராந்தியத்தில் கணிசமான இந்திய இராணுவம் கட்டமைக்கப்படுவதை காட்டவில்லை என்றாலும், எல்லை கோட்டின் பக்கத்தில் கல்வான் ஆற்றின் கரையில் லாரிகள், இராணுவ போக்குவரத்து மற்றும் புல்டோசர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சீன வாகனங்களை படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. சீன மோட்டார் சைக்கிள்கள் 5 கிலோமீட்டருக்கும் அதிகமாக நீண்டுள்ளது