சர்வதேச விமான போக்குவரத்து குறித்து அடுத்த மாதம் முடிவு: மத்திய மந்திரி
16 Jun,2020
இந்தியாவில் 3-வது கட்ட ஊரடங்கு உத்தரவு முடிந்ததில் இருந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனால் கடந்த மே 25-ந்தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின. முதலில் பல மாநிலங்கள் அதிருப்தி அடைந்தாலும் அதன்பின் விமான சேவைக்கு பச்சைக்கொடி காட்டின.
இந்நிலையில் சர்வதேச விமான போக்குவரத்து குறித்து முடிவு எடுக்க இருக்கிறோம் என மத்திய விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹர்தீப் சிங் பூரி கூறுகையில் ‘‘வரும் மாதத்தில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்குவது குறித்து முடிவு எடுப்பதற்கான பேச்சுவார்த்தையை தொடங்க இருக்கிறோம். இதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அனைத்து பங்குதாரர்கள் மற்றும் பயணிகள் நம்பிக்கை கொள்வது அவசியம்’’என்றார்.