வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு திட்டம் – ராஜ்நாத் சிங்
15 Jun,2020
வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
காணொளி காட்சி வாயிலாக நடத்திய ஜம்மு ஜன் சம்வாத் பொதுக்கூட்ட உரையில் கருத்து தெரிவித்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர், வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும் நமது நாடு ஏற்றுமதி நாடாக அறியப்பட வேண்டுமே தவிர இறக்குமதி நாடாக அறியப்படக் கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்தியா – சீனா எல்லை பிரச்சினை குறித்து பேசிய ராஜ்நாத் சிங் “இந்த விவகாரம் நீண்டகாலமாக நிலவி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனை விரைவில் தீர்க்க வேண்டும் எனவும் கடந்த 6ஆம் கிகதி நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எல்லை பிரச்சினையை விரைவில் தீர்க்கும் பொருட்டிலான பேச்சுவார்த்தையை தொடர இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.