சென்னை மாநகராட்சி கணக்கில் இடம்பெறாத 236 பேரின் உயிரிழப்பு விவரம்: காரணம்
11 Jun,2020
சென்னை மாநகருக்குட்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நிகழும் உயிரிழப்புகள் குறித்து மின்னஞ்சல் வாயிலாக மாநகராட்சிக்கு தெரிவிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், 236 நபர்களின் மரணம் விவரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு நடத்த கூடுதல் இயக்குநர் வடிவேலன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது
மேலும், மாநகராட்சி ஆணையருக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் எழுதியுள்ள கடிதத்தில், இறப்பு விவரங்களை தினமும் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், வீடுகளில் நடக்கும் இறப்புகளுக்கு கொரோனா தொற்று காரணமா என கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனா பெருந்தொற்றால் 244 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது