வழிப்பாட்டு தலங்களை திறப்பதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது மத்திய அரசு!
06 Jun,2020
பல்வேறு மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் ஆகியவை எதிர்வரும் 8ஆம் திகதியன்று திறக்கப்படவுள்ள நிலையில் அதற்குறிய வழிக்காட்டுதல்கள் நெறிமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிலைகள், புத்தகங்களை பொதுமக்கள் யாரும் தொடக்கூடாது என்பதுடன் அன்னதானம் வழங்குவது போன்ற சமயங்களில் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவகங்களில் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதுடன் காத்திருப்பு பகுதியில் வாடிக்கையாளர்களுக்கு உதவ கூடுதல் ஊழியர்கள் இருத்தல் வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுதிகளில் வாடிக்கையாளர்கள் கட்டாயம் அடையாள அட்டையுடன் உறுதிமொழி ஆவணத்தையும் சமர்பிக்க வேண்டும் என்றும், சமையல் அறையில் ஊழியர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றுவதுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பயன்படுத்தும் மாஸ்க் மற்றும் கையுறைகளை அப்புறப்படுத்தப்படுவது உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று வணிக வளாகங்களுக்குள் செல்பவர்கள் முககவசம் அணிந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு தொடர்பான சுவரொட்டிகள், விளம்பரங்கள் திரையிடப்பட வேண்டும்.
வணிக வளாகங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிற உடல்நலக் குறைபாடு கொண்ட ஊழியர்களை வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.