இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.65 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,466 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 175 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை, முதல்முறையாக 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே 29) காலை 9:30 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,58,333 ல் இருந்து 1,65,799 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,531 ல் இருந்து 4,706 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67,692 ல் இருந்து 71,106 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் தற்போது 89,987 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 7,466 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது. 175 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,65,799 ஐ எட்டியதை தொடர்ந்து, இதன் மூலம், கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 4706 ஆக அதிகரித்ததன் காரணமாக, பலியில் கொரோனா உருவான சீனாவையும் முந்தியது
தமிழகத்தில் இன்று (மே 29) புதிய உச்சமாக ஒரே நாளில் 874 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 20,246 ஆகவும், பலி எண்ணிக்கை 154 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 733 பேர் தமிழகத்திலும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 141 பேரும் அடங்கும். இதனால் மொத்த பாதிப்பு 20,246 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் 7 பேரும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டில் தலா ஒருவரும் என 9 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 154 ஆக உள்ளது. இன்று 765 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 11,313 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 8,776 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 71 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 11,334 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய பாதிப்புகளில் ஆண்கள் 518 பேர், பெண்கள் 356 பேர். மொத்த பாதிப்பில் 12 வயதுக்குள் உள்ளவர்கள் 1,203 பேர், 13 முதல் 60 வயதுக்குள் உள்ளவர்கள் 17,237 பேர், 60 வயதை கடந்தவர்கள் 1,806 பேர் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.