இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்தது
27 May,2020
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 793ஆக பதிவாகியுள்ளது.
உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிக பாதிப்புக்களை ஏறபடுத்தி வருகிறது.
ஊரடங்கு, முடக்கம், சமூக இடைவெளி, சுகாதார கட்டுப்பாடு என பல வழிகளைக் கையாண்டும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் 5,843 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 50 ஆயிரத்து 793ஆக பதிவாகியுள்ளது.
அதேநேரம் புதிதாக 172 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தமாக 4,344 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 64,277 பேர் குணமடைந்துள்ள நிலையில், 82,172 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் 8,944 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றுக்கு முன்பே ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.