ஊரடங்கை நீடிக்க மத்திய அரசு திட்டம்!
26 May,2020
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி நான்காம் கட்ட ஊரடங்கை எதிர்வரும் ஜுன் மாதம் 15 திகதிவரை நீடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பிலான ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஊரடங்கு காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து மாநில அரசுகள் அறிக்கை அளிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
குறித்த அறிக்கைகளின் அடிப்படையில் ஊரடங்கு நீடிப்பு குறித்து முடிவு செய்யப்படவுள்ளதாகவும் இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.