விமானம் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளை ஏற்றி செல்ல டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி
26 May,2020
இந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வரும் 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் உள்நாட்டு விமான சேவை மற்றும் சர்வதேச சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில் நேற்று முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது. உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
இந்நிலையில், சென்னையில் இருந்து முதல் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. விமான பயணிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனைகள், முக கவசங்கள் அணிதல் மற்றும் சமூக இடைவெளியுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன.
இதேபோன்று, நாடு முழுவதும் 200 ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, விமானம் மற்றும் ரெயில் நிலையங்களில் இருந்து பயணிகளை ஏற்றி செல்வதற்கு டாக்சி மற்றும் ஆட்டோக்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விமான மற்றும் ரெயில் பயணிகள் தங்களது இருப்பிடங்களுக்கு செல்வது முன்புபோல் எளிமையாகி உள்ளது.