நோக்கியா நிறுவனத்தில் 40 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று: காலவரையின்றி மூடப்பட்டது தொழிற்சாலை..!
24 May,2020
ஹூண்டாய் நிறுவனம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூன்று நபர்களும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரகடம் அருகே தொழிற்சாலைகளில் பணிபுரிந்த 40 தொழிலாளர்களுக்கு கொரோனோ வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, தொழிற்சாலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தது இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவின் போது சில தவறுகளை செய்து தொழிற்சாலைகள் 50% தொழிலாளர்களை பணியில் அமர்த்தி செயல்படலாம் என மத்திய மாநில அரசுகள் அறிவித்திருந்தது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த நோக்கியா சொல்யூஷன் தொழிற்சாலை 50% சதவிகித தொழிலாளர்களை கொண்டு செயல்பட ஆரம்பித்தது.
தற்போது இந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களில் ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதன் எதிரொலியாக 56 தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது பரிசோதனையில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 பேருக்கும் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 22 பேருக்கும் என 40 பேருக்கு வைரஸ் தொற்றுகண்டறியப்பட்டது தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் கடந்த 18ஆம் தேதி முதல் நோக்கியா தொழிற்சாலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் அனைத்து தொழிற்சாலைகளிலும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இதே போல ஹூண்டாய் நிறுவனம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூன்று நபர்களும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.