இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 6,654-பேருக்கு நோய்த்தொற்று
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 6,654 கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் தினம் தினம் புதிய உச்சம் ஏற்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,25,101 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 51,784 -ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,720 ஆக அதிகரித்துள்ளது.
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. 3,583 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்சமாக 6,088 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் தொற்று 6 ஆயிரத்தை தாண்டியது இது முதல்முறையாகும்.
இந்தியாவில் இன்று(மே 22) காலை 9:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,18,447 ஆக அதிகரித்துள்ளது. 3,583 பேர் பலியாகி உள்ளனர். 60,330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 48,534 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக6,654- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 41,642 - 1,454
தமிழகம் - 13,967 - 94
குஜராத் - 12,905 - 773
டில்லி - 11,659 - 194
ராஜஸ்தான் - 6,227 - 151
மத்திய பிரதேசம் - 5,981 - 270
உத்தர பிரதேசம் - 5,515 - 138
மேற்கு வங்கம்- 3,197 - 259
ஆந்திரா - 2,647 - 53
பஞ்சாப் - 2,028 - 39
பீஹார் -1,982 - 11
தெலுங்கானா - 1,699 - 45
கர்நாடகா- 1,605 - 41
காஷ்மீர் - 1,449 - 20
ஒடிசா - 1,103 - 07
ஹரியானா - 1,031 - 15
கேரளா - 690 - 04
ஜார்க்கண்ட் -290 03
சண்டிகர் - 217- 03
அசாம்- 203 - 04
திரிபுரா - 173 - 0
ஹிமாச்சல பிரதேசம் - 152 - 03
உத்தர்காண்ட்- 146 - 1
சத்தீஸ்கர் - 128 - 0
கோவா - 52- 0
லடாக் - 44 - 0
அந்தமான் - 33 - 0
மணிப்பூர் -25- 0
புதுச்சேரி- 20 - 0
மேகாலயா- 14-1
மிசோரம்- 01 - 0
தாதர் நாகர் ஹவேலி-01-0
நாகலாந்து - 01-0
அருணாச்சல பிரதேசம் - 01 - 0
தமிழகத்தில் இன்று (மே 22) மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 14,753 ஆகவும், பலி எண்ணிக்கை 98 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதில் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் 66 பேர், டில்லியில் இருந்து வந்தவர்கள் 13 பேர், மேற்குவங்கத்தில் இருந்து வந்தவர்கள் 6 பேர், ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் 2 பேர், குஜராத், ம.பி., ஒடிசா, தெலுங்கானாவில் இருந்து வந்த தலா ஒருவரும், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து வந்த ஒருவரும் அடங்கும். தமிழகத்தில் மொத்த பாதிப்பு 14,753 ஆக அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் இருவரும், தேனி, செங்கல்பட்டில் தலா ஒருவரும் உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,128 ஆனது. மொத்தமுள்ள 67 ஆய்வகங்கள் மூலமாக ஒரே நாளில் 12,653 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தற்போது 7,524 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.