இந்தியர்களுக்கு ஜூலை 31 வரை விசா நீட்டிப்பு: இங்கிலாந்து முடிவு
23 May,2020
லண்டன்: இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் தங்களின் நாட்டிற்கு திரும்புவதற்கான காலத்தை ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்துள்ளது இங்கிலாந்து அரசு.
இது குறித்து அந்நாட்டின் உள்துறை செயலாளர் பிரீத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இந்த நேரத்தில் அரசு மேற்கொண்டுள்ள முன்னோடியில்லாத திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். வெளிநாட்டவர்கள் இங்கிலாந்தை விட்டு வெளியேற முடியாவிட்டால் அவர்கள் ஜூலை இறுதி வரையில் இங்கிலாந்தில் தங்க முடியும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
விசா நீட்டிப்புக்காக உள்துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டவர்கள் விமானம் மற்றும் எல்லை கட்டுப்பாட்டுகள் நீக்கப்பட்ட உடன் கூடிய விரைவில் சொந்த நாடுகளுக்கு திரும்புவர். மேலும் இங்கிலாந்தில் நீண்டகாலம் தங்குவதற்கான விசாக்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்காக அதற்கான ஏற்பாடுகள் ஜூலை 31 நீட்டித்து உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.