இந்தியாவில் இன்று (மே 20) காலை 9:15 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 1,06,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,303 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று(மே 19) ஒரே நாளில் மட்டும் 5,611 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் அதிகமான கொரோனா பாதிப்பு பதிவானது இதுவே முதல்முறையாகும்.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,01,139 லிருந்து 1,06,750 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 3,163 லிருந்து 3,303 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 39,173 லிருந்து 42,298 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5,611 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, 140 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 61,149 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
மஹாராஷ்டிரா - 37,136
தமிழகம் - 12,448
குஜராத் - 12,140
டில்லி - 10,554
ராஜஸ்தான் - 5,845
ஆந்திரா - 2,532
தெலுங்கானா - 1,634
கர்நாடகா - 1,397
கேரளா - 642
தமிழகத்தில் இன்று (மே 20) மேலும் 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 13,191 ஆகவும், பலி எண்ணிக்கை 87 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: தமிழகத்தில் இன்று புதிதாக 743 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 83 பேர் மஹாராஷ்டிராவில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 13,191 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் 2 பேரும், திருவள்ளூரில் ஒருவரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 987 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,882 ஆக உள்ளது.
தற்போது 7,219 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 63 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று 11,894 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்த பாதிப்பில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 803 பேர், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 11,381 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1007 பேரும் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.