இந்தியாவில் கொரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை நெருங்கியது: தமிழகத்தில் இன்று
17 May,2020
இந்தியாவில் இன்று (மே 17) காலை 9.15 மணி நிலவரப்படி, கொரோனா பாதிப்பு 91 ஆயிரத்தை நெருங்கியது. 90,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,872 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 90,927 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 2,752 லிருந்து 2872 ஆக அதிகரித்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 34,109 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 30,706 பேர் பாதிக்கப்பட்டு, 7,088 பேர் குணமடைந்துள்ளனர், 1135 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை
மஹாராஷ்டிரா - 30,706
குஜராத் - 10,988
தமிழகம் - 10,585
டில்லி - 9,333
ராஜஸ்தான் - 4,960
ஆந்திரா - 2,355
தெலுங்கானா - 1,509
கர்நாடகா - 1,092
கேரளா - 587
: தமிழகத்தில் இன்று (மே 16) புதிதாக 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585 ஆகவும், பலி எண்ணிக்கை 74 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 384 பேரும், பிற நாட்டில் இருந்து வந்த 4 பேர், பிற மாநிலங்களை சேர்ந்த 89 பேர் என மொத்தம் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக 61 சோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. அதன் மூலம் இதுவரை 3,13,639 மாதிரிகள் சோதனையிடபட்டுள்ளன. இன்று 3 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 74 ஆனது. இன்று அதிகபட்சமாக 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 6970 சிகிச்சையில் உள்ளனர். உயர்தர சிகிச்சையினால் தொடர்ந்து 0.67 என்ற இறப்பு விகிதத்தையே தக்க வைத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.