கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு 80ஆயிரம் ரூபா தனியார் மருத்துவமனை
15 May,2020
தமிழ்நாட்டில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது, இந்த சூழ்நிலையில் இதுவரை 8000 மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 8,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2,134 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு ஒருபுறமிருக்க தனியார் மருத்துவமனைகளில் வியாபாரத்தை தொடங்கி விட்டது. அதாவது இந்த நோயை வைத்து எப்படி சம்பாதிக்கலாம் என்று ஸ்கெட்ச் போட்டு மக்களை சோதித்து வருகின்றனர். அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று இந்த பதிவை வெளியிடுகிறோம்.
திருவல்லிக்கேணியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், அவர்கள் ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளனர். ஒரு நாளைக்கு ஒருத்தரை சேர்த்து மருத்துவம் பார்ப்பதற்கு ஒரு நாளைக்கு ரூ 80000 ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
இதனைக் கேட்டு ஷாக்காகி உள்ளார், பின்பு மியாட் மருத்துவமனையில் விசாரித்த போது ரூ30000 ஒரு நாளைக்கு என்று தெரிவித்துள்ளனர். அதை விட சற்று குறைவாக தான் உள்ளது என்று தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவம் என்றால் கொரோனாவுக்கு மருந்து இல்லை அப்படியெனில் என்ன மருத்தவம் பார்க்க போகிறார்கள். தனியார் மருத்துவமனைகள் கொரோனாவில் குளிர்காயும் காலம் வந்து விட்டது, மனிதநேயம் இருக்கிறதா.? இல்லையா.? என்பதை அரசுதான் நிலைநாட்ட வேண்டும். ரமணா படத்தில் வருவது போன்று நிஜத்தில் நடக்கிறது நாம் பார்த்துள்ளோம், ஆனால் இந்த நேரத்தில் இதே போல் செயலை அரசு தடுக்க வேண்டும்.