தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 600 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது.
உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொடிய வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும், கொரோனாவின் தாக்கம் மாநிலத்தில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 5 ஆயிரத்து 409 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிப்பில் இருந்து ஆயிரத்து 547 பேர் குணமடைந்திருந்தனர். மேலும், வைரசுக்கு 37 பேர் பலியாகி இருந்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 9 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் பரவியவர்களில் ஆயிரத்து 605 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தாக்குதலுக்கு இன்று 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலி எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது
.
ராஜஸ்தானில் கொரோனாவுக்கு 100 பேர் பலி
உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்புர்வ தகவலின் அடிப்படையில் இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 56 ஆயிரத்து 342 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவியவர்களில் 37 ஆயிரத்து 916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 539 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 886 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தானில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.
அதில் அம்மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தானில் 3 ஆயிரத்து 491 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 475 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், அம்மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ஆயிரத்து 620 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒருவர் உயிரிழந்தார்.
இதனால் ராஜஸ்தானில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.