ஒரே குடும்பத்தில் 13 பேர்; ஒரே தெருவில் 40 பேர்! – சென்னையை மிரட்டும் கொரோனா!!
03 May,2020
தமிழகத்தைப் பொறுத்தவரை தலைநகர் சென்னையில்தான் மிக அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 174 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,757-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தலைநகர் சென்னையில்தான் மிக அதிகமான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 174 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா கண்காணிப்புப் பகுதி
சென்னையில் மக்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதே அதிவேக கொரோனா பரவலுக்குக் காரணம் என ஏற்கெனவே சென்னை மாநகராட்சி கூறியிருந்தது.
மேலும், சென்னையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளனர் என்றும் கூறப்பட்டது.
சென்னையில் முதலில் ஓரிரு இடங்களில் மட்டும் அதிகமாகக் காணப்பட்ட கொரோனா பாதிப்பின் தாக்கம் ஏப்ரல் 23-ம் தேதி 400 ஆக இருந்தது. இந்தநிலையில், படிப்படியாக அதிகரித்து மே 1-ம் தேதி சென்னையில் மட்டுமே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து தற்போது 1,257ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது மொத்த பாதிப்பில் 45.5% பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். தொடர்ந்து பாதிப்பின் தாக்கம் குறையாமல் இருந்து வருகிறது.

இதற்கிடையே, நேற்று தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் நுங்கம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராயப்பேட்டையைப் போல ஆதம்பாக்கத்தில் ஒரே குடும்பத்தில் மூவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த மூவருமே 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள்.
கோயம்பேடு மார்க்கெட்
இதேபோல் நேற்று முன்தினம் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரே தெருவில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
65 வயது முதியவர், தொடங்கி 18 வயது இளைஞர் வரை 12 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டறியும் பணியில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சிப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே, கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடைய 119 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னை – 52, அரியலூர் – 22, கடலூர் – 17, காஞ்சிபுரம் – 7, விழுப்புரம் – 20, பெரம்பலூர் – 1 என கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தொடர்புடையவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.