23 ஆயிரத்தை தாண்டிய கொரோனா! ஆபத்தில் இந்தியா
24 Apr,2020
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 6,427 ஆக உயர்ந்துள்ள நிலையில் 283 பேர் உயிரிழந்துள்ளனர். 283 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தொடர்ந்து டெல்லியில் 2,376 பேரும், குஜராத்தில் 2,624 பேரும், ராஜஸ்தானில் 1,734 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,659 ஆக உள்ளது. தமிழகம் 1,683 பாதிப்பு எண்ணிக்கையுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பு மொத்தமாக 23,073 ஆக உள்ளது. 4,749 பேர் குணமடைந்துள்ள நிலையில் 718 பேர் உயிரிழந்துள்ளனர்
3 லட்சத்தை நெருங்கிய கைது எண்ணிக்கை: மக்களால் விரக்தியடைந்த போலீஸார்!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கை மதிக்காமல் வெளியே சுற்றியதால் கைது செய்யப்படுபவர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஊரடங்கை மீறி சுற்றியதாக 2,99,039 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2,52,943 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 2,81,975 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, ரூ.2.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் அதை பின்பற்றாமல் சுற்றியதாக லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவரும் வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது