இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு தமது இராணுவத்தை அனுப்புகிறதா இந்தியா?
22 Apr,2020
இந்திய இந்திய இராணுவம் இலங்கை உட்பட சில நாடுகளுக்கு உதவும் வகையில் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு தனி அணிகளை அனுப்பி உதவுவதற்கு இந்திய இராணுவம் தயாராகி வருவதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கையாள்வதற்கான திறன்களை அதிகரிக்க அந்த நாடுகளுக்கு உதவுவதற்கு இந்திய இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனை ஆய்வகங்களை அமைக்கவும், உள்ளூர் மருத்துவ நிபுணர்களுக்கு தொற்றுநோயை எதிர்த்து போராடவும் உதவுவதற்காக 14 பேர் கொண்ட இந்திய இராணுவ குழு கடந்த மாதம் மாலைதீவுக்கு அனுப்பப்பட்டது.
அத்துடன், இந்த மாத ஆரம்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்தியா 15 பேர் கொண்ட இராணுவக் குழுவை குவைத்துக்கு அனுப்பியது.
தற்போது கொரோனாவை தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும் உதவி வழங்குவதற்கான இந்தியாவின் கொள்கையின் ஒரு பகுதியாக குறித்த நாடுகளுக்கான அணிகள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.