கொரோனா பணக்காரர்களுக்கு வரும் நோய்” – தமிழக முதல்வர் பழனிசாமி
17 Apr,2020
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொரோனா தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அதன் சில முக்கிய அம்சங்கள்:
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படுமா எனக் கேட்டபோது,
“இது பணக்காரர்களுக்கு வந்த நோய். ஏழைகளுக்கு எங்கே இந்த நோய் வந்தது? இது வெளிநாட்டிலிருந்து, வெளி மாநிலங்களிலிருந்து வந்து இறக்கப்பட்ட நோய். ஏழைகளைப் பார்த்தால் பயமாக இல்லை. பணக்காரர்களைப் பார்த்தால்தான் பயமாக இருக்கிறது. இவர்கள் வெளிநாடுகளுக்குப் போய்வந்து நோயை இறக்குமதி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்த நோய் உருவாகவில்லை” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் இதுவரை 13 மருத்துவப் பணியாளர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் அரசு மருத்துவர்கள். 5 பேர் தனியார் மருத்துவர்கள். ஒரு சுகாதாரப் பணியாளருக்கும் ஒரு தூய்மைப் பணியாளருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.
காய்கறிகளின் விலை கடந்த காலங்களோடு ஒப்பிட்டால் விலை குறைந்திருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் சொல்லும் விமர்சனங்கள் குறித்துக் கேட்டபோது,
குறைசொல்வதெற்கென்றே இருக்கக்கூடிய கட்சி தி.மு.க. எனக் குறிப்பிட்டார்.