சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள 6 மெட்ரோ நகரங்கள்
16 Apr,2020
இந்தியாவின் மும்பை,டெல்லி,சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய 6 மெட்ரோ நகரங்களும் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
சுமார் 400 மாவட்டங்கள் எந்த பாதிப்பும் இல்லாத பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவிய சிவப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட பின் அது எப்படி பச்சை மண்டலத்திற்கு மாறுகிறது என்பது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். கடந்த 28 நாட்களாக பாதிப்பு இல்லாத பகுதிகள் தாம் பச்சை மண்டலங்களாக உள்ளன.
இந்தியாவில் மொத்தம் உள்ள 718 மாவட்டங்களில் 170 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்கள் என்றும் மேலும் 207 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் மையங்களாக மாறக்கூடியவை என்றும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் கொரோனா மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகளவில் உள்ளன.
சிவப்பு பகுதி அல்லது ஹாட்ஸ்பாட்டாக அறியப்பட்ட பகுதிகளில் நோய் வேகமாகப் பரவுவதால் அங்கு ஊரடங்கு மிகக்கடுமையாக கடைபிடிக்கப்படுகிறது. 28 நாட்களாக பாதிப்பு அற்ற பகுதிகள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்படுகின்றன.