இந்தியாவில் வெளவால்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிப்பு!
                  
                     15 Apr,2020
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில், இரண்டு வெவ்வேறு வகையான வெளவால்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
	ICMR என அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை இதனைத் தெரிவித்துள்ளது.
	வெளவால், பறக்கவல்ல முதுகெலும்புள்ள பாலூட்டி ஆகும். இவற்றில், பழந்தின்னி வெளவால்கள் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என ஐயம் எழுந்தது.
	இதையடுத்து, கர்நாடகா, குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், வெளவால்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.
	இதில், தமிழ்நாடு, புதுச்சேரி. கேரளா, இமாச்சல பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வெளவால்களுக்கு, கொரோனா பெருந்தொற்று இருப்பதைக் கண்டறிந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை தெரிவித்துள்ளது.