எதிர்வரும் 20 இற்கு பின்னர் – எவையெல்லாம் இயங்கலாம்? எதற்கெல்லாம் தடை?
                  
                     15 Apr,2020
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	
	எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் பிறகு ஊரடங்கு தளர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
	மே 3 ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் எனவும் அதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிடும் எனவும் தெரிவித்திருந்தார்.
	இந்நிலையில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் என்னென்ன தளர்வுகள்ஸ அதன் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
	* ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
	* மாநிலங்கள் மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும்.
	* எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர், மோட்டார் மெக்கானிக் ஆகியோர் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
	* ஏப்ரல் 20-ஆம் திகதிக்கு பிறகு சிறு தொழில் செய்வோர் பணிகளை தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
	* 100 நாள் வேலை திட்டத்தில் பணிகளை தொடரலாம்
	* விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள், பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
	* நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்துகொண்டு பணியை தொடர வேண்டும்.
	* அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களில் உடல் வெப்பநிலை பார்க்கும் கருவி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
	* வேலைக்கு செல்வோர் பொதுஇடங்களில் எச்சில் துப்புதல் கூடாது.
	*அனைத்து கல்வி, பயிற்சி நிறுவனங்கள் இயங்காது.
	*சினிமா அரங்குகள், மால்கள், ஷாப்பிங், விளையாட்டு வளாகங்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், தியேட்டர்கள், பார்கள் போன்றவை மே 3 வரை மூடப்பட வேண்டும்.
	*மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள், திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
	*கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்கள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வுகள் பொருந்தாது.
	*ஏப்ரல் 20-க்கு பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம். ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்