ஊரடங்கை நீடிக்க ஏன் தயக்கம் – மு.க. ஸ்டாலின் கேள்வி
                  
                     13 Apr,2020
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	
	தமிழ்நாட்டில் ஊரடங்கை நீடிக்க தயக்கம் ஏன் என முதலமைச்சருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.
	கொரோனா விவகாரத்தில் தமிழக அரசு மீது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டுவது சந்தர்ப்பவாத அரசியல் என்றும், தன்னலமற்ற சேவையில் ஈடுபடும் அனைவரையும் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தெரிவித்திருந்தார்.
	இதற்கு பதிலளித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் பேசுவதற்கான நேரம் இதுவல்ல எனவும், அரசாங்கம் ஒழுங்காக முறையாக, மக்களுக்காகச் செயல்பட வேண்டும், அல்லது அரசாங்கத்தை தி.மு.க. செயல்பட வைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
	தமிழகத்தில் உடனடியாக ஊரடங்கு குறித்து முடிவு எடுங்கள்” என்று தாம் விடுத்த வேண்டுகோள் முதலமைச்சருக்கு அரசியலாக தெரிவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.