வளர்ப்பு பிராணியுடன், சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா.
13 Apr,2020
நாய்களை வளர்க்கும் பலர், அதை விட்டுச் செல்ல மனமில்லாமல், சுற்றுலாவிற்கும் கூட அழைத்துச் செல்வர். அதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்:
சில விமான நிறுவனங்கள் மட்டுமே, வளர்ப்பு பிராணிகளை அனுமதிக்கின்றன
வளர்ப்பு பிராணிகளுக்கான கால்நடை மருத்துவரிடம், ஊசி போட்டு, சான்றிதழ் பெற்று பயணிக்க வேண்டும். ரொம்ப குட்டியாக இருந்தால், அழைத்துச் செல்வதை தவிர்க்கவும்
பெங்களூரு பஸ்களில், வளர்ப்பு பிராணிகள், பறவைகளை எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. ஆனால், குழந்தைகளுக்கு தரப்படும் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
கர்நாடகாவில், ராஜஹம்சா, கர்நாடக வைபவா; 'ஏசி' மற்றும் 'ஏசி' இல்லாத 'ஸ்லீப்பர்' பஸ்களில் அனுமதி இல்லை. இதேபோல், தமிழக அரசு பஸ்களில், தனியார் பஸ்களின் நிலை அறிந்து, அதற்கேற்ப அழைத்துச் செல்லலாம்.
முயல், நாய், பூனை மற்றும் பறவைகள் என, எவற்றை அழைத்துச் சென்றாலும், கூண்டுக்குள் வைத்து தான், அழைத்துச் செல்ல முடியும்.
சில ரயில்களில், 'ஏசி' அல்லாத பெட்டிகளில் மட்டுமே வளர்ப்பு பிராணிகளை அழைத்துச் செல்ல வசதி உண்டு
உங்களுக்கு டிக்கெட் எடுத்து, வளர்ப்பு பிராணியை, 'பார்சல் ஆபிசில்' காட்டி, அதற்கு ரசீது பெற்று, பார்சல் பெட்டிகளில் அழைத்துச் செல்வது சிறந்தது. இதெல்லாம் தெரிந்த பின், வளர்ப்பு பிராணிகளை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். இல்லாவிட்டால், அவைகளை இழக்க நேரிடும்.