நியூயோர்க்! இந்தியர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
13 Apr,2020
அமெரிக்காவில் 40 ற்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு இலக்காகி, 289 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கொரோனா தொற்றின் மையமாக காணப்படும் நியூயோர்க்கிலும் அதன் அயல் மாநிலமான நியூயேர்சியிலும் இந்தியர்களும் இந்திய வம்சாவளியினரும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இதன்பிரகாரம் நியூயோர்க் மாநிலத்தில் 15 பேரும் நியூயேர்சி மாநிலத்தில் 12 ற்கும் மேற்பட்டவர்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பென்சில்வேனியா, புளோரிடா, டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் வசித்த இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் கொரோனா தொற்று இலக்காகி உயிழந்துள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்த 17 பேரும் குஜராத்தை சேர்ந்த 10 பேரும் இதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 4 பேரும் ஆந்திராவைச் சேர்ந்த இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் பலியாகி இருப்பதாக அமெரிக்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
உயிரிழந்தவர்களில் ஒருவர் மாத்திரம் 21 வயதானவர் எனவும் ஏனைய அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
இதேவேளை இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி 289 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8500 ற்கும் அதிகமானவர்கள் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.