டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகத்தைச் சேர்ந்தஎம்.மஜீத் முஸ்தபா உயிரிழப்பு!
13 Apr,2020
சர்ச்சைக்குரிய டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு அங்கேயே தங்கிய தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் அவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளமை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
விருத்தாச்சலத்தின் தாஷ்கண்ட் நகரைச் சேர்ந்த எம்.மஜீத் முஸ்தபா என்பவர் தனது மகன் ரஹமத்துல்லாவுடன் டெல்லியில் தப்லீக்-எ-ஜமாத்தின் மாநாட்டில் கலந்துகொண்டார்.
ஊரடங்குக்குப் பின்பு அங்கேயே தங்கிய இவர்கள் கடந்த மார்ச் 31இல் டெல்லியின் தீன் தயாள் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் இருவருக்கும் மூன்று வகையான பரிசோதனை நடைபெற்றுள்ளது.
இதன் அடுத்தகட்டமாக மார்ச் 7 அன்று அருகிலுள்ள லோக்நாயக் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்களது உடல்நிலை குன்றிவிடவே அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்னர். அங்கு ஏப்ரல் 9ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணிக்கு முஸ்தபா உயிரிழந்துள்ளார்.
கடந்த மார்ச் 19ஆம் திகதி, தன் மகனுடன் சென்னையில் இருந்து திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லி சென்றுள்ள மஜீத், தமிழக அரசின் தொழுநோய் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி 2009இல் ஓய்வுபெற்றவர்.
டெல்லியின் மர்க்கஸிற்கு வந்ததில் இறந்த தமிழர்களில் மூன்றாவது நபராக மஜீத் காணப்படும் அதேவேளை, அவரது மகன் ரஹமத்துல்லாவிடம் இரண்டு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் வைரஸ் தொற்றுக்கு ஆளாக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.