இந்தியாவில் நேற்று அதிகபட்ச உயிரிழப்பு- 228 ஆக அதிகரிப்பு!
10 Apr,2020
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 49 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் இதுவே ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச மரணங்களாகவும் பதிவாகியுள்ளன.
இதுவரை மொத்தமாக 228 பேர் மரணித்துள்ளதுடன் வைரஸ் தொற்றுக்குள்ளான 809 புதிய நோயாளர்கள் நேற்று ஒரேநாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாடுமுழுவதும் மொத்தமாக 6 ஆயிரத்து 771 பேர் இதுவரை தொற்றுக்கு உள்ளானமை கண்டறியப்பட்டுள்ளதுடன் 635 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதேவேளை, இந்தியாவில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 21 நாட்கள் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.