மகனை 1,400 கி.மீ., தூரம் ஸ்கூட்டியில் அழைத்து வந்த தாய்
10 Apr,2020
ஐதராபாத்: ஐதராபாத்தில் தவித்த மகனை நிஜாம்பாத், போதானை சேர்ந்த பெண் ராஜியா 1,400 கி.மீ., ஸ்கூட்டியில் பயணித்து மீட்டுள்ளார்
கொரோனா சமூக பரவலை தடுக்க நாடு முழுவதும் ஏப். 14 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல இடங்களில் மாட்டிக் கொண்ட பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் மாட்டிக் கொண்டனர்.
இந்நிலையில் நிஜாம்பாத்தைச் சேரந்த நிஜாமுதீன் என்பவர் மருத்துவ கோச்சிங்கிற்காக ஐதரபாத் வந்துள்ளார். ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் போனதால். அவரது தாயார் ராஜியா போதான் ஏசிபியிடம் அனுமதி லெட்டர் வாங்கி தன் மகனை 1,400 கி.மீ., ஸ்கூட்டியில் பயணித்து தன் மகனை பத்திரமாக மீட்டுள்ளார்.