34 இலட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் இலவசமாக அமெரிக்காவிற்கு விநியோகம்
08 Apr,2020
அமெரிக்காவில் கொரோனா சூறாவளி வீசும் நிலையில், அதன் சிகிச்சைக்காக, நியூயோர்க் மற்றும் லூசியானா மாநிலங்களுக்கு 34 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் சல்பேட் மாத்திரைகளை இலவசமாக வழங்க இந்திய வம்சாவளி மருந்து நிறுவனம் முன்வந்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 4 லட்சத்தை நோக்கியும், இறப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்தையும் நோக்கி வேகமாக செல்கிறது.
இந்த நிலையில் கொரோனா சிகிச்சைக்கு உதவிகரமாக இருக்கும் என ட்ரம்ப் கூறும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் சல்பேட் மாத்திரைகளை இலவசமாக வழங்க, நியூ ஜெர்சியில் இந்தியர்களான சிராக் மற்றும் சிந்து பட்டேல் நடத்தும் அம்னியல் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
இதற்காக அதன் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு, இந்த மாத மத்தியில் சுமார் 2 கோடி மாத்திரைகளை தயாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.