வைரசினால் பாதிக்கப்பட்ட ஒருவரால் ஒரு மாதத்தில் 406 பேர் நோயாளிகளாகும் ஆபத்து- இந்திய ஆய்வு
08 Apr,2020
கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் 30 நாட்களில் 406 பேரிற்கு வைரசினை பரப்பும் ஆபத்துள்ளதாக இந்திய மத்திய அரசின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக விலக்கல் உட்பட உரிய தடுப்பு நடவடிக்கைகள் இல்லாவிட்டால் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள நபர் ஒருவர் 30 நாட்களில் 406 பேரிற்கு நோயை பரப்புவார் என்பது இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் மத்திய சுகாதார அமைச்சக அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
உரியதடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தால் தொற்றினை இரண்டு பேர் என்ற அளவிற்கு குறைக்கலாம் என இந்திய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சிகளிற்கான இந்திய பேரவை இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை சமூக விலக்கள் மற்றும் முடக்கல் உத்தரவுகளை உரிய விதத்தில் பின்பற்றுமாறும் அந்த அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கு இது மிகவும் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.