தாராவியில் மேலும் இருவருக்கு பாதிப்பு
07 Apr,2020
மும்பையில் உள்ள தாராவி பகுதியில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராவியின் பளிகா பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் வேறு யாருக்காவது கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தாராவியில் மட்டும் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இந்தியாவில் உள்ள இரண்டு பெரிய நகரங்களில் இருக்கும் மூன்று மருத்துவமனைகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன.
மருத்துவமனை ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதால் தலைநகர் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள மருத்துவமனைகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனைகளில் சில நாட்களுக்கு பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மருத்துவமனையில் உள்ள மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
மும்பையில் உள்ள ஜாஸ்லோக் மருத்துவமனையில் சுமார் 10திற்கும் மேற்பட்ட செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வோக்ஹார்ட் என்ற மருத்துவமனையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதும் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் மாநில புற்றுநோய் மையத்தில் பணியுரியும் 50 மருத்துவ ஊழியர்களை தங்களை தானே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவர்கள், செலிவியர்கள் உட்பட 18 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையை முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.