இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை ஆயிரத்து 29ஆக அதிகரிப்பு!
29 Mar,2020
இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை ஆயிரத்து 29ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றால் வெளிநாட்டினா் உள்ளிட்ட ஆயிரத்து 29 போ் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளன.
அவா்களில் 84 போ் மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி விட்டனா். 920 போ் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 186 போ், கேரளத்தில் 165 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள். கா்நாடகத்தில் 74 போ், தெலுங்கானாவில் 65 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதேபோல், ராஜஸ்தானில் 54 போ், குஜராத்தில் 53 போ், உத்தரப் பிரதேசத்தில் 61 போ், டில்லியில் 40 போ், பஞ்சாபில் 38 போ், ஹரியாணாவில் 20 போ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மத்தியப் பிரதேசத்தில் 33 போ், ஜம்மு-காஷ்மீரில் 28 போ், மேற்கு வங்கத்தில் 15 போ், ஆந்திரப் பிரதேசத்தில் 13 போ், லடாக்கில் 10 போ் கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
பிகாரில் 9 பேரும் சண்டீகரில் 8 பேரும் சத்தீஸ்கா், உத்தரகண்ட், அந்தமான் நிகோபாரில் தலா 6 பேரும் ஹிமாசலப் பிரதேசம் மற்றும் ஒடிஸாவில் தலா 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். கோவாவில் 3 பேரும் புதுச்சேரி, மிஸோரம், மணிப்பூரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கொரோனா நோய்த் தொற்றுக்கு மகாராஷ்டிரத்தில் மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனால் அந்த மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6-ஆக அதிகரித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்ததால், அந்த மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக அதிகரித்தது.
கடந்த இரு தினங்களில் (வெள்ளி, சனி) புதிதாக 149 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.