சொந்த ஊருக்கு படையெடுக்கும் சென்னை மக்கள்
21 Mar,2020
கொரோனா பீதி காரணமாக ஒரு சில நிறுவனங்கள் விடுமுறையும், சில நிறுவனங்கள் வீட்டில் இருந்து பணிசெய்யும் படியும் கூறிஉள்ளதால் தற்போது ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணி செய்து வருகின்றனர்
இந்த நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி சென்னையில் உள்ள பலர் சொந்த ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. லேப்டாப் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டரை மூட்டை கட்டிக் கொண்டு சொந்த ஊருக்கு செல்வதாகவும் இதனால் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது
பள்ளி கல்லூரிகள் விடுமுறை, அலுவலகங்கள் வீட்டிலிருந்தே பணி செய்யும் முறை என அனைத்தும் ஒரே நேரத்தில் இருப்பதால் சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்
இதனை இதனை பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பேருந்துகள், பண்டிகை காலம் போல கூடுதல் கட்டணங்களை வசூலித்து வருவதாக ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இருப்பினும் வெளி மாவட்டங்களில் இருந்து தற்போது சென்னைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை சுத்தமாக குறைந்து விட்டதால் சென்னைக்கு பேருந்துகள் காலியாக வந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் அதேசமயம் இன்னொரு பக்கம் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் முழுவதும் பயணிகளால் நிரம்பி இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவுவதை தடுக்க பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று அரசு கூறி இருந்தாலும் கொரோனா நோயாளிகள் 3 பேர்களும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் இருந்தால் கூட தங்களையும் கொரோனா தொற்றிவிடும் என்ற பயத்தால் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வது செல்கின்றனர் என்றும் கூறப்படுகிறது