கொரோனா வைரஸ் எதிரொலி : மத்திய அரசின் புதிய அறிவிப்பு!
20 Mar,2020
கொரோனா வைரஸின் காரணமாக மேகாலய மாநிலத்தில் அனைத்து சுற்றுலா தலங்களும் மார்ச் 31-ஆம்திகதி வரை மூடப்பட்டுள்ளன.
இது ஏப்ரல் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ஷில்லாங் மற்றும் மேகாலயத்தின் மற்ற இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள உத்தேசித்திருக்கும் அனைத்து சுற்றுலாப்பயணிகளும் இதற்கு ஏற்றவாறு தங்களது பயணத்திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு மேகாலய மாநில அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே மேற்கண்ட இடங்களுக்கு சுற்றுலாச் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் இந்தத் தகவலை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.