கொரோனா வைரஸ் : வதந்திகளை பரப்பினால் சிறை தண்டனை!
17 Mar,2020
கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்பினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என ஹைதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் இதுவரையில் மூன்று பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா வைரஸை தடுப்பதற்கு அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் அனைத்து கல்வி நிறுவனங்கள், சினிமா திரையரங்குகள், பயிற்சி மையங்கள், மதுபான விடுதிகள் ஆகியவை எதிர்வரும் 31ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ளன.
அத்துடன் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மேல் அனுமதிக்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இந்நிலையிலேயே மேற்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.