சாதி சண்டை திருவிழா..! 100 பேர் மண்டை பிளந்தது!
13 Mar,2020
தெலங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தில் இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் வாரிசுகள் போல, மனதில் உள்ள வன்மங்களை போக்கும் விதமாக பல சாதியினர் சேர்ந்து இரு பிரிவாக நின்று ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் கும்மாங்குத்து திருவிழா போலீசாரின் தடையை மீறி அரங்கேறியது.
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் சாதிசண்டைக்கு மைதானம் அமைத்து நாதியற்ற சாதிகளுக்கு அங்கீகாரம் அளித்து வருவதாக அதகளப்படுத்தி இருப்பார்கள்..!இதே பாணியில் தெலங்கானாவில் பலசாதியினர் ஒன்று கூடி இருபெரும் குழுவாக பிரிந்து மோதிக்கொண்டு கைகளால் தாக்கி மண்டையை உடைத்துக் கொள்ளும் வினோத கும்மாங்குத்து திருவிழா அரங்கேறி வருகின்றது.
ஹோலி பண்டியையொட்டி ஆண்டுதோறும் நிஜாமாபாத் மாவட்டம் ஹன்சா கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை செய்து தங்கள் குத்துச் சண்டைத் திறமையை கும்பலாக காட்டிக் கொள்கின்றனர் சாதி பேதமற்ற சண்டையாளர்கள்..!
இந்த கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாதுஸ நாங்களும் வரமாட்டோம்ஸ என்பது போல நடுவில் நீண்ட கயிறு கட்டி, களைகட்டிய இந்த கும்மாங்குத்து விழாவுக்கு காவல் துறை அனுமதி மறுத்த போதும், ஊரே கூடி வேடிக்கை பார்க்க, நம்ம ஊரு ஜல்லிக்கட்டு போல அதிரிபுதிரியாக அரங்கேறியது இந்த மரணக் குத்து திருவிழா.! இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் களமிறங்கி அடித்தும் அடிவாங்கியும் மக்களை மகிழ்வித்தனர்..!
இந்த ஆண்டு தடை அமலில் இருப்பதை சுட்டிக்காட்டி போலீஸ் அனுமதி மறுத்த நிலையில், வந்ததற்கு 4 ஊமைக்குத்தாவது குத்திவிட்டுப் போகிறோம் என கூறி 20 நிமிடங்களே அரங்கேறிய கும்மாங்குத்துச் சண்டையில் 100 பேருக்கு மண்டை உடைந்தது.
பலருக்கு ரத்தகாயம் ஏற்பட்ட போதும் ஒருவர் கூட மருத்துவமனைக்கு செல்லவில்லைஸ! ஆஞ்சநேயர் கோயில் அக்னிகுண்டத்து சாம்பலை அள்ளி தங்கள் காயத்தின் மீது பூசிக்கொண்டு வலியை மறைத்து தங்களை வலிமையானவர்களாக காட்டிக் கொண்டனர் இந்த பராக்கிரமசாலிகள்..!
தங்கள் ஊருக்கு எந்த கெடுதலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக தாங்களே ஊர் கூடி மோதிக்கொண்டும், காயப்படுத்திக் கொண்டும், உடலுக்கும் உயிருக்கும் கேடு விளைவித்துக் கொண்டும், திருவிழா கொண்டாடும் இந்த ஊர் மக்களுக்கு பகுத்தறிவு கொஞ்சம், பஞ்சம் தான் என்கின்றனர் காவல்துறையினர்.