ஈரான் விமான சேவைகளை நிறுத்திக் கொள்ள இந்தியா உத்தரவு!
29 Feb,2020
ஈரானில் இருந்து இந்தியா வரும் அனைத்து விமான சேவகளையும் நிறுத்துமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
ஈரானின் மஹான் ஏர், ஈரான் ஏர் ஆகிய 2 நிறுவனங்களும், டெல்லி மற்றும் மும்பைக்கு அதிக எண்ணிக்கையில் விமான சேவையை நடத்துகின்றன.
சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானில் கொரானா தொற்று அதிகம் உள்ளது. அங்கு இதுவரை 245 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளதுடன், 26 பேர் அதற்கு பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரானின் அனைத்து விமான சேவைகளும் உடனடியாக நிறுத்தப்படுகின்றன.
ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட இந்திய விமான நிறுவனங்கள் ஏற்கனவே சீனா, ஹாங்காங்கிற்கான சேவையை நிறுத்தியுள்ள நிலையில், விஸ்தாரா நிறுவனம் பாங்காங் மற்றும் சிங்கப்பூர் சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.