நான் இறந்துவிட்டேன்: எனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும்- நித்யானந்தா
                  
                     23 Feb,2020
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	தனது சொத்துக்கள் யாருக்கு சென்றடைய வேண்டும் என சாமியார் நித்யானந்தா புதிய காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
	உலகின் ஏதோ ஒரு இடத்தில் தலைமறைவாக இருந்துகொண்டு நித்தம் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இருந்துவருகிறார் சாமியார் நித்யானந்தா.
	அந்த வகையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “20 ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு கைலாசத்தைக் கட்டியமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ள.
	வாடிகனைப் போல இந்து மதத்துக்கென ஒரு இடத்தை உருவாக்க வேண்டும் என்ற எனது ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், அதுகுறித்து வேறு எந்தத் தகவலையும் தரப்போவது இல்லை.
	சில நாடுகளுடன் தூதரக ரீதியிலான உறவுகளும் தொடங்கிவிட்டன. என்னுடைய மரணத்துக்குப் பிறகு எனது சொத்துக்கள் யாருக்குச் சென்றடைய வேண்டும் என்பது குறித்து உயில் எழுதி வைத்துவிட்டேன்.
	இதேவேளை, தமிழகத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் இனிமேல் தமிழகத்துக்கு செல்லப்போவதில்லை. தமிழக ஊடகங்களைப் பொறுத்தவரை நான் இறந்துவிட்டேன். நான் இறந்துவிட்டால் எனது உடலை பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டும். இதுவே எனது கடைசி ஆசை” என்று அவர் கூறியுள்ளார்.