நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு!
20 Feb,2020
பாலியல் புகார் வழக்கில் சிக்கிய நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்ய கர்நாடகாவின் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் புகார் வழக்கில் சிக்கிய நித்தியானந்தா விசாரணைக்கு நேரில் ஆஜராகாததையடுத்து அவரது ஜாமீனை, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா கடந்த 3ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், ராம்நகர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நித்தியானந்தாவின் ஜாமீன் மனுவை ரத்து செய்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை, ராம்நகர் நீதிமன்றம் உறுதிசெய்தது. அத்துடன் நித்தியானந்தாவை உடனடியாக கைது செய்யவும் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டது.