சீனாவுக்கு போனால் இந்தியாவுக்கு வராதீங்கஸ.
05 Feb,2020
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 2 வாரங்களில் சீனாவுக்கு சென்று இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ள வெளிநாட்டவர் மற்றும் சீனர்களின் விசாக்களை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவிலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக, சீனா தொடர்பான விசா விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சீனாவில் வசிப்பவர்களுக்கு இ-விசா வழங்குவதை கடந்த 2 ஆம் தேதி மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக வழக்கமான விசாக்களையும் ரத்து செய்வதுடன் அவற்றின் அடிப்படையில் இந்தியாவில் இருப்பவர்கள் உடனடியாக மத்திய சுகாதார அமைச்சகத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ள சீனர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்கள் அல்லது துணை தூதரகங்களை தொடர்பு கொண்டு விசா செல்லுமா செல்லாதா என்பதை அறிந்து கொண்டு அதன்பின்னர் புறப்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.