தெலுங்கானாவில் முதியோர் இல்லத்தில் சங்கிலி கொண்டு கட்டி வைத்திருந்த 73 பேர் மீட்பு
                  
                     25 Jan,2020
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	
	தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் நகரம் கிராமத்தில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இந்த இல்லத்தில் மனநிலை பாதிப்படைந்த நோயாளிகள் மனிதநேயமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர்.  அவர்கள் சங்கிலிகளை கொண்டு கட்டி வைத்து துன்புறுத்தப்படுகின்றனர் என போலீசாருக்கு புகார் வந்தது.
	
	இதனடிப்படையில், போலீசார் முதியோர் இல்லத்திற்கு சென்றனர்.  ஓர் அறையில் வைத்து பூட்டி வைக்கப்பட்டு இருந்த 73 பேரை போலீசார் மீட்டனர்.  அவர்கள் துன்புறுத்தப்பட்டு இருந்ததும் தெரிய வந்தது.
	இதனால் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலனுக்கான சட்டம் 2007ன் கீழ் முதியோர் இல்ல நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.